Home நாடு சீபீல்ட் : கலவரத்தில் கைதானோர் ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்

சீபீல்ட் : கலவரத்தில் கைதானோர் ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்

747
0
SHARE
Ad

சுபாங் ஜெயா: கடந்த திங்கட்கிழமை (26 நவம்பர்) சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை காவல் துறையினர் விசாரணைக்கு உதவும் நோக்கில் இன்று கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

அவர்கள் எல்லோரும், கைவிலங்கிடப்பட்டு பாதுகாப்பு சீருடையில், சுமார் நண்பகல் 12.45 மணியளவில் பேருந்தில் வந்து இறங்கினர். 100 ஆண்டு கால பழமையான ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த வாரம் கோயில் வளாகத்தில் கலவரம் நடந்தது.

இச்சம்பவத்தில் தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிம் என்பவர் கடுமையான காயத்திற்குள்ளானார்.