Home நாடு தாபோங் ஹாஜி: நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கியது

தாபோங் ஹாஜி: நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கியது

793
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக மலேசிய காவல் துறை தலைவர் (ஐஜிபி) முகமட் புசி ஹருண் தெரிவித்தார்.

கடந்த வாரம் தபோங் ஹாஜியின் தற்போதைய நிருவாகம், தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ்,  மற்றும் அதன் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரிகளான டான்ஶ்ரீ இஸ்மி இஸ்மாயில் மற்றும் டத்தோ ஜொஹான் அப்துல்லாவுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்திருந்தது.

முந்தைய பரிமாற்றங்கள் உள்ளடக்கிய விசாரணையாக இது அமைகிறது. 2017-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் ஒன்றில் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் தாபோங் ஹாஜி நிதியிலிருந்து பணம் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாகவும், 2012-ம் ஆண்டில் நடந்த சில நிதி முறைகேடுகள் குறித்த புகார்களும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.