Home உலகம் இலங்கை: ராஜபக்சே மேல்முறையீடு செய்கிறார்

இலங்கை: ராஜபக்சே மேல்முறையீடு செய்கிறார்

939
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே (படம்), தனக்கு எதிராக நீதிமன்றம் விதித்திருக்கும் தடை உத்தரவை அகற்றக் கோரி இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்கிறார்.

நேற்று திங்கட்கிழமை இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் ராஜபக்சே பிரதமராகச் செயல்படுவதற்குத் தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து இலங்கை உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப் போவதாக ராஜபக்சே இன்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அரசியல் சாசன விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே இருக்கிறது எனவும் ராஜபக்சே கூறியிருக்கிறார்.