Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியாவுக்கு 160 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஏர் ஆசியாவுக்கு 160 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

1333
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது விமானப் பயணக் கட்டணச் சீட்டுகளுக்கான விலைகளை அறிவிக்கும் விளம்பரங்களை தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டதற்காக ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தலா 160,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் வான் போக்குவரத்துக்கான ஆணையமான மலேசிய வான்போக்குவரத்து ஆணையம் (The Malaysian Aviation Commission) இந்த அபராதத்தை விதித்துள்ளது.

இரண்டு நிறுவனங்களும் தங்களின் அபராதங்களைச் செலுத்தியுள்ளன.

#TamilSchoolmychoice

வான்போக்குவரத்து ஆணையத்தின் விதிகளின்படி ஒரு பயணத்துக்காக விமானப் பயணி செலுத்த வேண்டிய கட்டணத்தின் இறுதி நிர்ணயத் தொகை, வரிகள், கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றோடு சேர்க்கப்பட்டு, தெரிவிக்கப்பட வேண்டும். ஏர் ஆசியா நிறுவனங்கள் தங்களின் பயணச் சீட்டுகளின் விலைகளை அறிவிக்கும்போது இந்த நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதற்காக இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.