பெட்டாலிங் ஜெயா: சமூகம் மற்றும் அரசியல் ஆர்வலர் ஹரிஸ் இப்ராகிம், இன, மதப் பிரச்சனைகளைக் கையாள்பவர்களுக்கு எதிராக ஊடக பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
சயா அனாக் மலேசியா (Saya Anak Malaysia) அமைப்பின் நிருவனருமான ஹாரிஸ், தற்போது மக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இனப் பிரச்சனைகளை தூண்டி விடுவதில் சில அரசியல்வாதிகளின் பங்கு உள்ளதை குறிப்பிட்டுப் பேசினார். இவர்கள் அடிமட்டம் வரையிலும் சென்று மக்களுக்கிடையே கோபங்களை கிழர விடுகிறார்கள் எனக் கூறினார். இது குறித்துப் பேசிய அவர், அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் சில அரசியல்வாதிகள், மலாய்க்காரர்கள் தங்களின் அடையாளங்களை இழந்து விடுவர் என்ற அச்சத்தை தூண்டி விடுவதாக அவர் சொன்னார்.
சில மேற்கத்திய நாடுகளில் இருக்கும் அளவிற்கு மலேசியாவில் இனவெறி வெறுப்பு கடுமையாக இல்லை என்று ஹாரிஸ் கூறினார்.
சாதாரணசூழ்நிலையில்கிராமப்புறங்களில் உள்ள மலாய்க்காரர்கள் சர்ச்சைக்குரிய வாசகங்கள் மற்றும் தலைப்புச் செய்திகளை பார்க்கும் பொழுது அவர்கள் கோபப்படத் துவங்குகிறார்கள். ஆனால், இவை யாவும் தனிப்பட்ட அரசியல் அமைப்பின் திட்டமென்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
மலாய்க்காரர்களின் வறிய நிலைக்கு, இன அடிப்படையிலான அரசியல்தான் காரணம் என்று நம்பிக்கைக் கூட்டணி ஊடக வாயிலாக எடுத்துரைக்க வேண்டும் என ஹாரிஸ் பரிந்துரைத்தார்.