Home நாடு மஇகா உதவித் தலைவர் சிவராஜா மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

மஇகா உதவித் தலைவர் சிவராஜா மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

1897
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜாவை நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேறுமாறு இன்று கேட்டுக் கொண்டார். தற்போது, சிவராஜா மீது எழுந்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுக் காரணமாக, அவர் செய்துள்ள மேல்முறையீடு முடிவுறும் வரை, நீதிமன்றம் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது என அறிவித்ததைக் கருத்தில் கொண்டு அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும், சிவராஜா வழக்கறிஞர் ஒருவரின் கருத்தைப் பெற்று, சபாநாயகரின் அலுவலகத்திற்கு அவ்விபரங்களை அனுப்ப வேண்மென முகமட் அரிப் கூறினார். எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்காகவே இவ்வாறு செய்யப் படுவதாக அவர் தெளிவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice