Home நாடு சீ பீல்ட்: கைதானவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது

சீ பீல்ட்: கைதானவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது

2104
0
SHARE
Ad

ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கைக்குப் பிறகு, இக்கலவரம் குறித்து கைதானவர்களின் எண்ணிக்கை 102 -ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையிலும், 49 மலாய்க்காரர்கள், 44 இந்தியர்கள், 8 இந்திய முஸ்லீம்கள், மற்றும் ஒரு சீனர் கைதாகியுள்ளதாக சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் மஸ்லான் மன்சோர் கூறினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவின் சமூக ஊடகத்தில் வெளியான கருத்துக் குறித்த விசாரணையைப் பற்றி நிருபர்கள் கேட்ட போது, “அவரது வாக்குமூலத்தைப் பெற்றுவிடோம், இனி விசாரணை அறிக்கைகள் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரிடம் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரது உரையின் பதிவை நாங்கள் எடுத்துள்ளோம். வழக்கு குற்றவியல் பிரிவு 504-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.