Home நாடு 1எம்டிபி: நஜிப் கணக்கறிக்கை மாற்றம் குறித்து விசாரிக்கப்பட்டார்

1எம்டிபி: நஜிப் கணக்கறிக்கை மாற்றம் குறித்து விசாரிக்கப்பட்டார்

903
0
SHARE
Ad
நஜிப் துன் ரசாக் – கோப்புப் படம்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், 1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கை சம்பந்தமான விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இன்று காலை 10:30 மணி அளவில் வந்தடைந்தார்.

இதற்கிடையே, 1எம்டிபி குறித்த விசாரணைக்கு முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முதன்மைச் செயலாளர், டான்ஸ்ரீ சுக்ரி சாலே, முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அலி ஹம்சா, முன்னாள் அரசாங்க தலைமைக் கணக்காய்வாளர் டான்ஶ்ரீ அம்பிரின் புவாங் மற்றும் 1எம்டிபியின் நிருவாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ சுல்கிப்ளி அகமட் ஆகியோர் இது குறித்து இதுவரையில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உண்மைகளை மறைத்து கணக்கறிக்கையை மாற்றியமைத்ததில் தமக்கு தொடர்பில்லை என்று டான்ஶ்ரீ சுல்கிப்ளி குறிப்பிட்டிருந்தார்.