Home நாடு 40 ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா பல்கலைக்கழகத்தில் கால் பதித்த கிட் சியாங்

40 ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா பல்கலைக்கழகத்தில் கால் பதித்த கிட் சியாங்

803
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகர், லிம் கிட் சியாங், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் புதிய மலேசியா, பழைய அரசியல்” எனும் தலைப்பில் இன்று உரையாற்றினார்.

“இந்த அரங்கத்தில் பேசுவதற்கு எனக்கு புதுமையாக இருக்கிறது. மேலும், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கு வருவது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது”, என கிட் சியாங் கூறினார்.

#TamilSchoolmychoice

இஸ்கண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், புதிய மலேசியாவை உருவாக்குவதில் கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகள் முக்கிய பங்கினை வகித்துள்ளன என்றார்.

“நூறு நாட்களில் புதியதொரு மலேசியாவை நாம் உருவாக்க இயலாது, ஆனால் அதற்கான அடித்தளத்தை நாம் இட்டிருக்கிறோம்” என லிம் தமது உரையில் குறிப்பிட்டார் .