Home நாடு பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்

பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்

1572
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: வருமான அடிப்படையில் பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டமானது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மலிக் கூறினார்.

இப்பதிவுக் குறித்து பலர், தற்போதைக்கு ஏற்ற முடிவுதான் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, பிடிபிடிஎன் தலைவர், வான் சைபுல், 2,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களிடம், அவரவர் வருமானம் அடிப்படையில் உதவிக் கடன்களை பெறும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு மக்களிடமிருந்து பெருத்த எதிர்ப்பை எதிர்கொண்டது.