Home கலை உலகம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்: பண்டிகை நாட்களில் அதிகமான படங்கள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்: பண்டிகை நாட்களில் அதிகமான படங்கள்

2006
0
SHARE
Ad
படம்: நன்றி புதிய தலைமுறை

சென்னை: பொதுவாகவே பண்டிகை பெருநாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளை அலங்கரிக்கும். இரசிகர்கள் சமூக ஊடகங்களில் இவர்களாகவே அவரவர் நடிகர்களின் பெருமையைக் கொட்டித் தீர்த்து முட்டிக் கொள்வார்கள்.

அவ்வாறு இம்முறை கிறிஸ்மஸுக்கும், பொங்கலுக்கும் பல படங்கள் போட்டியில் இறங்கியுள்ளதைக் காண முடிகிறது. இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதாவது, வருகிற டிசம்பர் 14-ம் தேதி நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகவும், சில படங்களை அத்தினத்தில் வெளியீடு செய்யலாம் என சங்கம் கூறியிருந்தது. 

இதற்கு, தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளாதப் பட்சத்தில், டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10-ம் தேதிகளில் தங்கள் படங்களை வெளியிடலாம் என சங்கம் முடிவெடுத்துள்ளதை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இம்முறை கிறிஸ்மஸ் தினத்தன்று அடங்கமறு, மாரி 2, சீதக்காதி, மற்றும் கனா என நான்கு திரைப்படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.