Home நாடு துங்கு மக்கோத்தா: மந்திரி பெசாரை கவிழ்க்க முயற்சி

துங்கு மக்கோத்தா: மந்திரி பெசாரை கவிழ்க்க முயற்சி

1082
0
SHARE
Ad

Tunku Ismail Tunku Ibrahimஜோகூர் பாரு: தற்போதைய ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாபியானை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஒருவர் வேகமாகப் பணியாற்றி வருவதாக துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தெரிவித்தார்.

நீங்கள் இந்நாட்டின் பிரதமர் கூட இல்லை. உங்கள் கைப்பாவையாக இருக்கும் ஒருவரை மாநில மந்திரி பெசாராக வைப்பதன் மூலம், மாநிலத்தைக் கட்டுப் படுத்த முடியுமா?” என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜோகூரை ஆட்சி செய்வதற்கு சுல்தான் இன்னும் இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவருமான ஒஸ்மான், பூலாவ் குகுப்பை தேசியப் பூங்காவாகவும், அப்பகுதி சுல்தானின் நிலப்பகுதி என அறிவித்ததன் காரணமாகவும், தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வருகின்றன.