Home கலை உலகம் பேட்ட: இசைவெளியீடு கோலாகலமாக நடந்தேறியது

பேட்ட: இசைவெளியீடு கோலாகலமாக நடந்தேறியது

1058
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் பொங்கல் திருநாளின்போது வெளியாகவிருக்கும் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடந்தேறியது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்த வேளையில் அவர்களோடு, ‘பேட்ட’ படத் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், பேட்ட படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றத்தை அந்தந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களோடு வெளியிட்டு வருகிறது படத்தயாரிப்புக் குழு.

#TamilSchoolmychoice

விஜய் சேதுபதி ஜித்து என்ற கதாபாத்திரத்தில் கையில் துப்பாக்கியோடு தோற்றமளிக்க, இன்று வெளியிடப்பட்ட மற்றொரு தோற்றத்தில் அழகான திரிஷா, இளமைக்கால ரஜினியுடன் இணைந்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் சரோ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.