Home நாடு “நான் முன்பே சொத்து மதிப்புகளை தெரிவித்து விட்டேன்!”- வேதமூர்த்தி

“நான் முன்பே சொத்து மதிப்புகளை தெரிவித்து விட்டேன்!”- வேதமூர்த்தி

1075
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த அக்டோபர் 10-ம் தேதி தமது சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாக பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார் .

ஆயினும், அவரது இரு வாகனங்கள் குறித்த விபரங்களை சொத்துகளாக கருத இயலாது என ஊழல் தடுப்பு ஆணையம் கூறியதை, தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஊழல் தடுப்பு ஆணைய இணையத் தளத்தில் அவரது பெயர் இன்னும் சொத்து மதிப்புகளை தெரிவிக்காதவர் பட்டியலில் இருப்பதாக குறிப்பிட்டு, அவ்வாறு அறிவித்தவர்களின் மத்தியில் தமது பெயரையும் பொதுவான பார்வைக்கு பதிவிட்டிருப்பதன் காரணத்தை விளக்கக் கோரினார்.    

இதற்கிடையே, நேற்று திங்கட்கிழமை, அறிவிக்கும் அளவிற்கு தம்மிடம் சொத்துகள் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டிருந்தது அனைத்து இணையத்தளச் செய்திப் பக்கங்களையும் நிரப்பியது.

#TamilSchoolmychoice

தாம் சமூக செயற்பாட்டாளராக இயங்கிக் கொண்டிருந்த போது, தமது முந்தைய வருமானங்களை ஏழை இந்தியர்களின் நலனுக்காகச் செலவழித்து விட்டதாக வேதமூர்த்தி தெரிவித்திருந்தார்.