Home நாடு நஜிப், அருள் கந்தா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்

நஜிப், அருள் கந்தா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி கணக்கறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், 1எம்டிபியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அருள் கந்தாவும் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது.

தணிக்கை செய்யப்பட்ட 1எம்டிபி கணக்கறிக்கையில் அவர்கள் இருவரும் திருத்தங்கள் செய்ததாக முன்னாள் அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் (ஆடிட்டர் ஜெனரல்) கூறியிருந்த தகவல்களின் அடிப்படையில் நஜிப்பும், அருள் கந்தாவும் விசாரிக்கப்பட்டனர்.