Home நாடு ம.சீ.ச: தேசிய முன்னணி கூட்டணியைக் கலைக்க கடிதம் அனுப்பப்படும்

ம.சீ.ச: தேசிய முன்னணி கூட்டணியைக் கலைக்க கடிதம் அனுப்பப்படும்

1080
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணிக் கூட்டணியைக் கலைக்கக் கோரி ம.சீ.ச முறையாக கடிதம் ஒன்றினை, தேசிய முன்னணியின் உயர்மட்டத்திற்கு அனுப்பும் என கட்சியின் மத்திய செயற்குழு பத்திரிக்கை அறிக்கை வாயிலாக தெரிவித்தது.

இது குறித்து, கடந்த டிசம்பர் 2-ம்தேதி, கட்சியின் 65-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்த அறிக்கைக் கூறியது.

#TamilSchoolmychoice

மலேசியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் ம.சீ.ச உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்றப் பின்பே, இம்முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய செயற்குழு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.