Home நாடு 10 வயதுச் சிறுவனுக்கு மரணம் விளைவித்த ஆடவன் மீது குற்றச்சாட்டு

10 வயதுச் சிறுவனுக்கு மரணம் விளைவித்த ஆடவன் மீது குற்றச்சாட்டு

704
0
SHARE
Ad

காஜாங்: செமினி வட்டாரத்திலுள்ள ஆலயம் ஒன்றின் பூசாரி என நம்பப்படும் ஆடவர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 43 வயதான அந்த ஆடவர், கடந்த டிசம்பர் 5-ம் தேதி,10 வயது நிரம்பிய சிறுவனுக்கு மரணத்தை ஏற்படுத்தியதால் இக்குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டது.

இதற்கிடையே, அந்த ஆடவர் தமது மீதான இக்குற்றச்சாட்டை நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் மறுத்தார்.

#TamilSchoolmychoice

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2001-ம் ஆண்டின் குழந்தைச் சட்டம் 31(1)(ஏ) பிரிவின் கீழ், 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படும். ஒருவர் உத்தரவாதத்தில், 15,000 ரிங்கிட் பிணையில் அவ்வாடவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.