கோலாலம்பூர்: முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட்டிற்கு எதிராக நாளை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்பரேஷன் (Felda Investment Corporation) வாயிலாக சரவாக்கில் தங்கும் விடுதியை வாங்கியதற்காக அவர் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
இதற்கிடையே கடந்த 2017, ஜூன் 21-ம் தேதி முகமட் இசாவும் அவரது மனைவியும் கென்சிங்டன், இலண்டன் மற்றும் கூச்சிங், சரவாக்கில் 2013 முதல் 2015 வரையிலும் உள்ள காலக்கட்டதில் தங்கும் விடுதிகளை வாங்கியதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.