Home உலகம் ரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்

ரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்

874
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவினால் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் அதே சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

எந்த சூழ்நிலையிலும் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்திருந்த சிறிசேனா, தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி இன்று ரணிலைப் பிரதமராக நியமித்தார்.

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி 69 வயதான ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் இலங்கை கடும் அரசியல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து ரணிலுக்கு ஆதரவாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்ததற்கும், ரணிலை நீக்கியதற்கும் எதிராகத் தீர்ப்பு வழங்கியது இலங்கை உச்ச நீதிமன்றம்.

அதைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை ரணிலுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்துதான் இன்று ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்திருக்கிறார் சிறிசேனா.