Home நாடு இந்து சங்கம் : “அன்பே சிவம்” – மோகன் ஷான் அணி எல்லாப் பதவிகளையும் கைப்பற்றியது

இந்து சங்கம் : “அன்பே சிவம்” – மோகன் ஷான் அணி எல்லாப் பதவிகளையும் கைப்பற்றியது

1521
0
SHARE
Ad
வெற்றி பெற்ற மோகன் ஷான் தலைமையிலான அணியினர்

பெட்டாலிங் ஜெயா – நேற்று பரபரப்பான சூழ்நிலையில், நாடு முழுவதும் அனைவரையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் தேசிய நிலையிலான தேர்தலில் ‘அன்பே சிவம்’ என்ற பெயரிலான அணி அமைத்து, நடப்பு தேசியத் தலைவர் மோகன் ஷான் தலைமையில் போட்டியிட்டி அணியினர் அனைவரும் வெற்றி பெற்றனர்.

இவர்களை எதிர்த்து இராமநாதன் கோவிந்தன் தலைமையில் ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரைக் கொண்ட மற்றொரு அணியினர் போட்டியிட்டனர்.

மலேசிய இந்து சங்கம் வெளியிட்ட அதிகாரபூர்வ முடிவுகளின்படி, மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 755 பேராளர்கள் வாக்களித்தனர். 12 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

வெற்றி பெற்றவர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும் பின்வருமாறு:

1. 549 – ஸ்ரீ காசி பாலகிருஷ்ணன் – Sri Kasi Balakrishnan
2. 536 – டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் Datuk RS Mohan Shan
3. 522 – அழகேந்திரன் – Alagendran
4. 515 – திருமதி பாலாமணி – Mrs Balamani
5. 512 – தர்மன் – Tharman
6. 506 – கவியரசு – Kaviarasu
7. 504 – திருமதி சாந்தா – Mrs Santha
8. 500 – டாக்டர் ரூபா – Dr. Rupa
9. 489 – பொன் சந்திரா –  Mr. Ponn Chandra
10. 480 – இராதாகிருஷ்ணன் – Mr. Ratakrishnan