Home நாடு தபோங் ஹாஜியின் தலைமை நடவடிக்கை அதிகாரி கைது செய்யப்பட்டார்!

தபோங் ஹாஜியின் தலைமை நடவடிக்கை அதிகாரி கைது செய்யப்பட்டார்!

1158
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தபோங் ஹாஜி நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி (Chief Operations Officer) அடி அசுவான் இன்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாபோங் ஹாஜியின் உள் கட்டட வடிவமைப்புக் குத்தகையாளரை, தனது வீட்டின் உடை அலமாரியை கட்ட பயன்படுத்தியதற்காக அடி அசுவான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதன் பேரில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

ஆயினும், கைதுக்கான விவரங்கள், இந்த கட்டத்தில் இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.