பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிலத்தை வாங்குவதற்குப் பிரபல தொழில் அதிபர் வின்சென்ட் டான், மக்கள் ஒன்றாக சேர்ந்து பணத்தைத் திரட்டி அந்த நிலத்தை வாங்கலாம் என்று பரிந்துரைச் செய்திருந்தார்.
ஆனால், தற்போது, கோயில் மற்றும் நில உரிமையாளர்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட்டு இவ்விவகாரம் தொடர்பாக தீர்வுக் காணப்பட்டதால், தற்போது பணம் திரட்டுவதை நிறுத்துவதாக சன் மீடியா நிறுவனம் குறிப்பிட்டது.
“சன் மீடியா கார்ப்பரேஷன் வழங்கிய ரசீதுகள், பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களாகக் கொள்ளப்படும்.நாங்கள் அப்பங்களிப்புகளை நன்கொடையாளர்களிடமே ஒப்படைத்து விடுவோம்”, என சன் தினசரி இன்று அறிவித்தது.
இதுவரையிலும், சுமார் 2,277,483 மில்லியன் ரிங்கிட் வரையிலும் திரட்டப்பட்டு விட்டதாக சன் மீடியா நிறுவனம் தெரிவித்தது.
பணத்தைத் திரும்ப பெறும் நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்கள் மற்றும் அவற்றின் ஆவணங்களை saveseafieldtemple@thesundaily.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜனவரி 18-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என சன் தினசரி தெரிவித்தது.
அப்படி, திரும்பக் கோரப்படாதப் பணம் கோயிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அது குறிப்பிட்டது.