Home நாடு கேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு!

கேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு!

1161
0
SHARE
Ad

புத்ராஜெயா: மலேசியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் வாக்களிப்பு நேரடியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹருண் இன்று தெரிவித்தார். 

“வாக்களிக்கும் செயல்முறை மற்றும் வாக்கு கணக்கெடுப்பு முறைகளை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பதோடு, பொதுமக்களிடத்தில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இம்முறை உதவும்என்று தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, தேர்தல் முடிவுகளும் உறுதி அளித்தபடி நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அசார் கூறினார்.

ஜனவரி-26 ம் தேதி கேமரன் மலை இடைத் தேர்தல் நடைப்பெறும் என அசார் முன்னதாக அறிவித்திருந்தார்.