Home உலகம் பிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி!

பிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி!

1048
0
SHARE
Ad
படம்: லின்னெட் பறவை

பிரிட்டன்:  பொதுவாகவே அழியும் தருவாயில் இருக்கும் பட்சிகள், விலங்குகளை பாதுகாக்கும் எண்ணமே பெருவாரியான எல்லா அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கக்கூடும்.

வெல்ஷ் பாதுகாப்புப் பிரிவுத் (Welsh Conservation) தலைவர், பிரிட்டனின் மிகவும் பொக்கிஷமான மற்றும் அரிதான பறவை இனங்களைச் சுட்டுக் கொல்வதற்கு அனுமதியளித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் வனவிலங்கு ஆர்வலர்கள், இம்முடிவினை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த அனுமதியின் வாயிலாக சுமார் 1,000-கும் மேற்பட்டப் பறவைகள் சுட்டுக் கொல்லப்படலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், பிரிட்டனில் பல்வேறுப் பகுதிகளில் அழியும் தருவாயில் உள்ள பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி தரப்பட்டதை ஒட்டி, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே பேசிய, அரசாங்கத் தரப்பினர், விமான பாதுகாப்பு, பொது சுகாதாரம், கால்நடைகளின் கடுமையான சேதத்தைத் தடுக்கத்தான் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினர்.

இதுவரையிலும், கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி, இவ்வருடம் செப்டம்பர் மாதம் வரையிலும் சுமார் 2,348 வகையிலான விலங்குகள் கொல்லப்பட்டுவிட்டன எனும் அதிர்ச்சியூட்டும் தகவல், ஜேசன் எண்ட்பில்ட் எனும், வனவிலங்கு இணையப் பதிவர் (Jason Endfield) பக்கத்தில் வெளியாகியுள்ளது.