Home நாடு கேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை

கேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை

1169
0
SHARE
Ad

PAS Logoகோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.

பாஸ் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் இன்று தெரிவித்தார்.

மே 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பட்ட 5 முனைப் போட்டியில் போட்டியிட்ட பாஸ் கட்சியின் வான் மஹாடிர் வான் மாஹ்முட் 3,587 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

இந்த முறை பாஸ் கட்சி போட்டியிடாததால், மே 9 பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் இந்த முறை எந்தப் பக்கம் போகும் என்ற சுவாரசியமான கேள்வி எழுந்துள்ளது.

மஇகா-தேசிய முன்னணி வேட்பாளருக்கு பாஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்தால் அதன் மூலம் தேசிய முன்னணி வேட்பாளருக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை கடந்த முறையை விட கூடுதலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.