2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வானில் பறந்துக் கொண்டிருந்த எம்எச்17 பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான் என நெதர்லாந்தும் ஆஸ்திரேலியாவும் கடந்த மே மாதம் நேரடியாகக் குற்றம் சாட்டின.
இரு நாடுகளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பொறுப்பான பதிலைக் கூற ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்து ஆறு மாதங்கள் ஆன போதும், அதனை ரஷ்யா பொருட்படுத்தாது இருப்பது சரியானதல்ல என்று வெளியுறவு அமைச்சர் ஸ்டேவ் ப்ளோக் கூறினார்.
ஆம்ஸ்டர்டாமிற்கும், கோலாலம்பூருக்கும் இடையில் வானில் பறந்துக் கொண்டிருந்த போயிங் 777 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டச் சம்பவத்தில், அதில் பயணம் செய்த 298 பயணிகளும் கொல்லப்பட்டனர்.