Home வணிகம்/தொழில் நுட்பம் டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு சரிவு!

டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு சரிவு!

1148
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று காலை சரிந்துள்ளதாக நாணய பரிமாற்ற வணிகர் ஒருவர் கூறினார்.

நேற்று, வியாழக்கிழமை ரிங்கிட்டின் மதிப்பு 4.1760/1800-ஆக பதிவுச் செய்யப்பட்டது. இன்று காலை 9:10 மணிக்கு, ரிங்கிட் 4.1780/1810 என்ற மதிப்பில் டாலருக்கு எதிராகக் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது.

உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலைக் காரணமாக, முதலீட்டாளர்களிடையே தொடர்ச்சியான பயம் இருந்து வருகிறது. இதனைக் காரணமாகக் கொண்டு, டாலரின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளதாக அந்த வணிகர் கூறினார்.