Home உலகம் பிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்!

பிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்!

1235
0
SHARE
Ad

பிரிட்டன்: கிட்டத்தட்ட 600 வீடற்ற மக்கள் பிரிட்டனில் கடந்த ஆண்டுகளில் இறந்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. முதல் முறையாக வீடற்ற மக்களின் இறப்புகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து சற்று தூரத்தில், வீடற்ற மனிதர் க்யூலா ரெமஸால் எனப்படுபவர், இறந்து கிடந்ததைக் கண்டறிந்து, இந்த நெருக்கடியை அரசு தீவிரமாக ஆராயத் தொடங்கியது. இவ்வாறாக ஏற்பட்ட இரண்டாவது மரணமாக இது கருதப்படுகிறது. பிப்ரவரியில், போர்த்துகீசிய ஆடவர் ஒருவர், வெஸ்ட்மின்ஸ்டெரில் உள்ள இரயில் நிலையம் அருகே,  இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

மக்களுக்குக் கொடுக்கப்படும் சேவைகள் மற்றும் நன்மைகள் விவகாரத்தில் தெரேசா மே செய்திட்ட மாற்றங்களினால் வீடற்ற மக்கள் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் குற்றம் சாட்டுகிறார்.

#TamilSchoolmychoice

பிரிட்டன் தேசியப் புள்ளிவிபரம் அலுவலகம் (Office for National Statistics), கடந்த 2017-ல் வீடில்லாத மக்களின் இறப்புகள் தற்கொலை, மருந்து நச்சு மற்றும் கல்லீரல் நோய்களின் காரணமாக நிகழ்ந்துள்ளதைக் காட்டுகின்றன.

இந்த புள்ளிவிவரங்கள் முற்றிலும் வெட்கக்கேடானவை. உலகின் மிகப் பெரிய செல்வந்த நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம், ஆனால், நம் தெருக்களில் மக்கள் இறப்பதற்கு எந்த காரணமும் இருந்திருக்க கூடாது,” என எதிர் கட்சித் தலைவர், மெலனிஓன் குறிப்பிட்டார்.