Home நாடு “என் மகளின் முடிவை மதிக்கிறேன்”- அன்வார்

“என் மகளின் முடிவை மதிக்கிறேன்”- அன்வார்

1043
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவருடைய மகள் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை மதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.

அவருடைய அம்முடிவானது, கட்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பெரிய இழப்பு என்று நான் மறுக்க முடியாது. அனைத்து கட்சி உறுப்பினர்களும், மலேசியர்களும் அவரின் அம்முடிவை மதிப்பார்கள்,” என தாம் நம்புவதாக அன்வார் குறிப்பிட்டார்.

நூருல் இசா, பிகேஆர் உதவித் தலைவர் மற்றும் பினாங்கு மாநிலத் தலைவர் பதவியிலிருந்து கடந்த டிசம்பர் 17-ம் தேதி விலகினார்.