Home நாடு சிப்பாங்கில் மகாகுரு ஆறுமுகம் சுழற்கிண்ண சிலம்பப் போட்டி

சிப்பாங்கில் மகாகுரு ஆறுமுகம் சுழற்கிண்ண சிலம்பப் போட்டி

1448
0
SHARE
Ad

சிப்பாங் – நாளை ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி, கொண்டைக்கட்டி கோவிந்தசாமி சிலம்ப ஆசான் அவர்களின் சீடர் கருப்பண்ணன் ஆசிரியர் வழி வந்த சுந்தரம் ஆசிரியரின் மானசீக மாணவனான மறைந்த டத்தோஸ்ரீ டாக்டர் மகாகுரு ஸ்ரீ எஸ். ஆறுமுகம் அவர்களின் சுழற்கிண்ணச் சிலம்ப போட்டி சிப்பாங் வட்டார
சிலம்பக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிப்பாங் நகர பொது மண்டபத்தில் காலை எட்டு மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்குச் சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் துறையின் துணையமைச்சருமான  ஹனிபா மைடின் (படம்), சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ரோனி லியூ, சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

அதோடு உலகெங்கும் தமிழ் மணம் பரப்பி வரும்
மரியாதைக்குரிய ஐயா ஒரிசா பாலு (படம்) அவர்களும், தனியார் வானொலியான ராகா அறிவிப்பாளர் மனிதநேய மக்கள் கலைஞர் கவிமாறன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில்
கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

சிலம்ப மாணவர்களை ஆசிர்வதிக்க சிலம்ப ஆசான் பெரியசாமி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக இந்தப் போட்டியின் ஆலோசகரான டத்தோ சிவக்குமார், நாடு தழுவிய அளவில் இருக்கும் சிலம்ப ஆசிரியர்களையும், சிலம்ப மாணவர்களையும் இந்நிகழ்ச்சிக்கு வருக வருகவென வரவேற்கிறார்.