ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஜூராசிக் பார்க் படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது.
ஹாலிவுட்டின் மிக பிரபலமான யூனிவர்சல் பிக்சர்ஸ் பட நிறுவனம் 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நிலையில் அவர்கள் தயாரிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜூராசிக்பார்க்’ படம் வெளிவந்தது.
63 மில்லியன் டொலர் செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட ‘ஜூராசிக்பார்க்’ படம் 900 மில்லியன் டொலர் வருமானத்தை அள்ளித்தந்தது.
அதோடு, சிறந்த இசை சேர்ப்பு, சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த காட்சியமைப்பு ஆகிய பிரிவுகளில் இந்த படம் அகாடமி விருது பெற்றது.
இந்த நிலையில் ஜூராசிக்பார்க் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். விடுமுறையை குழந்தைகள் கொண்டாடும் விதமாக இந்த 3டி படம் வெளிவர உள்ளது. சாம் நைல், லாரா டாம், ஜாப் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஜான் வில்லியம்ஸ் இசையில், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் இயக்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும். அதேசமயம் குழந்தைகளை கவர்வதற்காக 3டி படத்தில் பல சுவாரசிய காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம்.