Home உலகம் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு புரளி

ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு புரளி

551
0
SHARE
Ad

effil-towerபாரீஸ், ஏப்ரல் 1- பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற “ஈபிள்’ கோபுரத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கிருந்த 1,500 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக அதிசயங்களில் ஒன்றான, “ஈபிள் டவர்’ உள்ளது. இந்த கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.

இதை அடுத்து ஈபிள் கோபுரத்தை சுற்றிப்பார்த்து கொண்டிருந்த  1,500க்கும் மேற்பட்ட, சுற்றுலாப் பயணிகளை போலீசார் அவசரமாக வெளியேற்றினர்.

#TamilSchoolmychoice

மோப்ப நாய்களின்  உதவியுடன் பரிசோதனை செய்யப்பட்டதில் அங்கு  வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. தற்போது ஈபிள் கோபுரத்தை சுற்றிலும்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.