Home நாடு பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்

பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்

837
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியப் பள்ளிகளில் அதிகமாக மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், நடப்பில் இருக்கும் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் போவதாகவும் அண்மையில் பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார்.

ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், சுலபமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையிலும் மலேசியப் பள்ளிகளின் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் மகாதீர் கூறியிருந்தார்.

அதுகுறித்துக் கருத்துரைத்திருக்கும் ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், இதுவே நம்பிக்கைக் கூட்டணியின் பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கப் போகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனம், மதம், பிரிவினைகளைப் பின்னுக்குத் தள்ளி கடந்து, மலேசியாவை சிறந்த நாடாக உருவாக்க வேண்டும் – மாறாக, பொய்ப் பிரச்சாரங்கள், அச்சத்தை உருவாக்குதல், இன அவதூறுகளின் மூலம் மலேசியர்களைப் பிரிப்பது போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் நடப்புப் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும்படி கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மகாதீர் கூறியிருந்தார்.