Home கலை உலகம் அஜித்துடன் நடிக்கிறார் ரங்கராஜ் பாண்டே

அஜித்துடன் நடிக்கிறார் ரங்கராஜ் பாண்டே

988
0
SHARE
Ad

சென்னை – கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தந்தி தொலைக்காட்சி மூலமாக தமிழ் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளராக தனது தொலைக்காட்சி பேட்டிகள், விவாதங்கள் மூலம் உயர்ந்தவர் ரங்கராஜ் பாண்டே.

எனினும் சில நாட்களுக்கு முன்னர் தந்தி தொலைக்காட்சியிலிருந்து தான் விலகிவிட்டதாக அறிவித்தார் பாண்டே. நிர்வாகத்துடன் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்றும், மாறாக ஒரே பாணியிலான வேலை காரணமாகவே தான் புதிய சூழ்நிலைக்கு செல்ல விரும்புவதாகவும் பாண்டே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வினோத், அடுத்ததாக அஜித் நடிக்கும் படமொன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் தானும் நடிப்பதாக ரங்கராஜ் பாண்டே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

வேறு எந்த தகவலையும் வெளியிடும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் பாண்டே அறிவித்திருக்கிறார்.

பாண்டே தொடர்ந்து படங்களில் நடிப்பாரா, அல்லது மற்ற தொலைக்காட்சி ஊடகங்களில் இணைந்து தனது ஊடகத் துறையைத் தொடர்வாரா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

நேரடி விவாதங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம் தொலைக்காட்சி ஊடகத்தைக் கலக்கிய பாண்டே தமிழ்த் திரையுலகையும் ஒரு சுற்று கலக்குவாரா என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது தமிழ்த் திரையுலகம்.