கோலாலம்பூர்: தேசிய வகைப் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். மத போதனை பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவத்தை அளிக்காமல், அதிகமான நேரத்தை “பயனுள்ள” பாடங்களுக்கும் வழங்க வேண்டும் எனபிரதமர் தெரிவித்தார்.
மலேசியர்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்கு இச்செயல்முறை வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
உலக மொழியாகி விட்ட ஆங்கிலத்தையும் பள்ளி மாணவர்கள் அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மகாதீர் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலீக், பிரதமர் தம்மை பள்ளிப் பாடத்திட்டத்தை புதுப்பிப்பதற்கு அறிவுறுத்தியதாகவும், அப்புதியப் பாடத்திட்டங்கள் 2020 அல்லது 2021-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.