Home இந்தியா எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை!

எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை!

945
0
SHARE
Ad

சென்னை: காலம் சென்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டதோடு, 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஓர் எழுத்தாளருக்கு செய்வித்த பெரும் மரியாதையாக இது ஏற்கப்படுகிறது. புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, அன்னாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் இலக்கியத்துறையில் 57 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரபஞ்சன் 46 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

100-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்து, “வானம் வசப்படும்எனும் நாவல் வழி மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.