Home நாடு ஜனவரி தொடங்கி ரோன் 95 விலை குறைக்கப்படும்!

ஜனவரி தொடங்கி ரோன் 95 விலை குறைக்கப்படும்!

939
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து ரோன் 95 இரக பெட்ரோல் எண்ணெய், குறைந்த விலையில் விற்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகச் சந்தையில் எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, இம்முடிவு எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

மேலும், தற்போது அமலில் இருக்கும் வாராந்திர விலை நிர்ணயப் போக்கை, அடுத்த ஆண்டு முதல், மாதாந்திர சில்லறை விலை நிர்ணயமாக மாற்றப்படும் என்று அறிக்கை ஒன்றின் வாயிலாக லிம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், எண்ணெய் விலையில் உயர்வுக் கண்டால், ரோன் 95 மற்றும் டீசல் சில்லறை விலை லிட்டருக்கு 2.20 ரிங்கிட்டுக்கும், 2.18 ரிங்கிட்டுக்கும் நிர்ணயக்கப்படும் என்றார். 

இந்த விலையானது, 2019-ஆம் ஆண்டில், ரோன் 95 பெட்ரோல் மானிய அமலாக்கத் திட்டம் செயல்படுத்தும் வரையில் இருக்கும் என அவர் கூறினார்.