Home கலை உலகம் ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு

ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு

1168
0
SHARE
Ad

பாஸ்டன் – அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி (படம்) பதின்ம வயது பையன் ஒருவன் மீது பாலியல் வன்முறை புரிந்தார் எனக் குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.

எதிர்வரும் ஜனவரி 7-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். 2016 ஜூலை மாதத்தில் மதுபான விடுதி ஒன்றில் 18 வயது பையன் ஒருவனுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து அவனை பாலியன் வன்முறை புரியும் நோக்கத்தோடு, அவனது உடல்பாகங்களைத் தொட்டார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருக்கின்றன.

மசாசுசெட்ஸ் மாநிலத்தில் மதுபானம் அருந்தும் அதிகாரபூர்வ வயது 21 ஆகும்.

#TamilSchoolmychoice

அந்தப் பையன் ஹீதர் உன்ரோ என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளரின் மகனாவார்.  கடந்த ஆண்டு உன்ரோ ஸ்பேசி மீது தனது மகன் தொடர்பான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தியிருந்தார்.

கெவின் ஸ்பேசி மீது அண்மையில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் இருந்தும், தொலைக்காட்சித் தொடர்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.

கெவின் ஸ்பேசி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, வெளியிட்ட காணொளி ஒன்றில் ஸ்பேசி தன்மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக மறுத்தார்.