Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா 25 விமானங்களை 3.22 பில்லியன் ரிங்கிட்டுக்கு விற்றது

ஏர் ஆசியா 25 விமானங்களை 3.22 பில்லியன் ரிங்கிட்டுக்கு விற்றது

939
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி மலிவு விலைக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தனது வணிக நடவடிக்கைகளை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் தனக்குச் சொந்தமான 25 விமானங்களை 3.22 பில்லியன் ரிங்கிட் விலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்திருக்கிறது.

இதன் மூலம், அதிகமான சொத்துக்களைக் கொண்டிருக்கும் நிறுவனமாக இல்லாமல், தங்களின் மைய வணிக நோக்கமான இணையம் வழி விமானம் சேவைகள் வழங்கும் நோக்கத்தைச் சிறப்புடனும் செம்மையுடனும் செயல்படுத்த ஏர் ஆசியா முனைந்துள்ளது.

இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தங்களின் சேவைகளை மேலும் திறன்வாய்ந்த முறையில் மேம்படுத்த முடியும் எனவும் நடப்பில் இருக்கும் கடன்களைக் குறைக்கவும் ஏர் ஆசியா நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் மலேசியப் பங்கு சந்தைக்கு விடுத்த அறிக்கையொன்றின் வழி தெரிவித்தது.