Home நாடு சட்டவிரோத பணியாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பிரம்படி!

சட்டவிரோத பணியாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பிரம்படி!

3282
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை பணியில் அமர்த்தியிருக்கும் முதலாளிகளுக்குக் கடுமையான தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை கேட்டுக் கொண்டது.

இது குறித்து, குடிநுழைவுத் துறைத் தலைமை ஆணையர், டத்தோஶ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், 1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களைப் பணியில் அமர்த்தியிருந்த முதலாளிகளுக்கு பிரம்படி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். அதே மாதிரியான தண்டனை தொடர்ந்து  நிறைவேற்றுவது குறித்து தலைமை நீதிபதியைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில், நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை பணியில் அமர்த்தியிருக்கும் பெருமளவிலான முதலாளிகளுக்கு பிரம்படி கட்டாயமான தண்டனையாக வழங்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.  

#TamilSchoolmychoice

இதற்கிடையில், இந்த வருடத்தில் மட்டும், நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட 14,500 சோதனைகளில், 47,000-க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்துள்ளதாக முஸ்தாபார் கூறினார்.