Home நாடு “மஇகாவுக்கே சாதகம், எனினும் கடுமையான போட்டியை வழங்குவோம்” – குவான் எங்

“மஇகாவுக்கே சாதகம், எனினும் கடுமையான போட்டியை வழங்குவோம்” – குவான் எங்

858
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – “நடைபெறவிருக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில், மஇகாவுக்கே சாதகமான சூழல் நிலவுகிறது. காரணம், இதுவரையில் அந்தத் தொகுதியில் ஒருமுறை கூட நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் வென்றதில்லை. நீண்ட காலமாக அந்தத் தொகுதியை மஇகாவே தக்க வைத்துக் கொண்டு வந்துள்ளது. எனினும், நாங்கள் கடுமையான போட்டியை வழங்குவோம்” என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இன்று பினாங்கு மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நிதியமைச்சருமான லிம் குவான் எங், கேமரன்மலை தொகுதியில் வெல்வதன் மூலம் புதிய வரலாற்றை படைப்போம் என்றும் கூறிய லிம் குவான் எங், நம்பிக்கைக் கூட்டணி கேமரன் மலையில் வென்றால் பசுமைப் பிரதேசமான அங்குள்ள மக்கள் தொடர்ச்சியான பொருளாதார மேம்பாடுகளைக் காண்பர் என்றும் கூறினார்.

கேமரன் மலைக்கான ஜசெக வேட்பாளர் யார் எனக் கேட்கப்பட்டபோது, அடுத்த சில நாட்களில் கட்சியின் மத்திய செயலவை கூடவிருக்கின்றது என்றும் அதில் விவாதிக்கப்பட்டு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் லிம் குவான் எங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாங்களும் இடைத் தேர்தலுக்குத் தயாராக வேண்டியிருப்பதால் கூடிய விரைவில் தான் கேமரன் மலைக்கான வேட்பாளரை அறிவிக்கவிருப்பதாக குவான் எங் கூறினார்.