Home நாடு மகாதீர்: இரண்டு வருடங்களில் பதவி விலகுவேன்!

மகாதீர்: இரண்டு வருடங்களில் பதவி விலகுவேன்!

1889
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரதமர் பொறுப்பினை ஏற்க உள்ளதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் ஒருபோதும் கூறியதில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இருப்பினும், தாம் பிரதமர் பதவியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விலகுவதாகக் கூறியிருந்ததை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் தலைவர்களான மூசா ஹித்தாம் மற்றும் அம்னோவின் மூத்தத் தலைவர் தெங்கு ராசாலி ஹம்சா போன்றோருடன் ஒப்பிடுகையில் பி.கே.ஆர் தலைவராக பதவி வகிக்கும் அன்வாரின் பங்களிப்பு மிகுதியாக இருப்பதால் பிரதமர் பதவிக்கு அவரே தகுதியானவர் என பிரதமர் கூறினார்.

முந்தைய நிர்வாகத்தால் விட்டுவைக்கப்பட்ட குழப்பத்தைச் சரிசெய்யவும், அரசாங்கத்தை சீர்திருத்தவும் தான், தாம் பிரதமர் பதவியை ஏற்றதாக மகாதீர் கூறினார்.

நாட்டின் அடுத்த பிரதமர், அன்வார் எனும் கருத்துக்கு பல்வேறு கருத்துகள் எழுந்த வண்ணமாக உள்ளன. சிலர் அதனை தற்போதைய பிரதமர், அவர் கூறியபடி நிறைவேற்றுவார் என்றும், மேலும் சிலர் மகாதீர் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை என்றும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.