Home நாடு ஆதாரம் இல்லாமல் வேதமூர்த்தியை குற்றம் கூற வேண்டாம்!- மகாதீர்

ஆதாரம் இல்லாமல் வேதமூர்த்தியை குற்றம் கூற வேண்டாம்!- மகாதீர்

1107
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் குறித்த முழுமையான விசாரணையைப் பெற்ற பின்பே, பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியின் நிலை குறித்து தாம் முடிவு செய்ய உள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் சீ பீல்ட் கோயிலில் நடந்த கலவரத்தின் போது 24 வயதுடைய தீயணைப்பு வீரர் முகமட் அடிப் குறிப்பிட்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிர் இழந்தார். அவரது, மரணத்திற்குப் பிறகு, அரசாங்கம் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் அடிப்பின் மரணத்திற்குக் காரணம் வேதமூர்த்திதான் எனக் கூறி பதவி விலகுமாறு பேரணி நடத்தியும், மனு கொடுத்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லாமல், நாம் யாரையும் குற்றம் சாட்டக்கூடாது”, என பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice

அடிப்பின் மரணத்திற்கு வழிவகுத்த காரணத்தைத் தீர்மானிக்க விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.