Home இந்தியா சபரிமலைக் கோயில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!

சபரிமலைக் கோயில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!

832
0
SHARE
Ad

திருவனந்தபுரம்: சபரிமலைக் கோயில் புனித சடங்குகளுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, முதன் முதலாக இரண்டு பெண்கள் இன்று காலை (புதன்கிழமை) கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர். அதனை அடுத்து, காவல் துறையினர் கேரளாவில் பாதுகாப்புகளை அதிகரித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) கேரளாவில் உள்ள காசாரகோட் (Kasaragod) தொடங்கி திருவனந்தபுரம் (Thiruvanthapuram) வரையிலும் இலட்சக் கணக்கான பெண்கள் ஒன்று சேர்ந்துவூமன்ஸ் வோல்’ (Women’s Wall) எனும் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

#TamilSchoolmychoice

அனைத்து வயது பெண்களுக்கும் சபரிமலை ஆலயத்திற்குச் செல்ல அனுமதி உண்டு என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரளாவை மீண்டும் இருண்ட காலத்திற்குள் அழைத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும்பெண்களுக்கு சம உரிமை உண்டு என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்ட பெண்கள் எதிர்ப்புச் சுவர், நேற்று கேரள மாநில அரசாங்கம், இடதுசாரி ஜனநாயக முன்னணியால் (Left Democratic Front), ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதனை அடுத்து தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.