கலிபோர்னியா: இனி புதிதாக நெட்பிலிக்ஸ் (Netflix) கணக்கு தொடங்க இருப்போரும், மீண்டும் கணக்கைப் புதுப்பிப்பவரும், அவர்களுடைய ஐடியூன்ஸ் (iTunes) கணக்கு வழியாகச் செய்ய இலயாது என நெட்பிலிக்ஸ் தெரிவித்தது.
வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாக்களை நேரடியாக நெட்பிலிக்ஸ் வழியாகப் பதிவுசெய்து,கடன் பற்று அட்டைஅல்லது வங்கி பற்று அட்டைகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம் எனத் தெரிவித்தது.
ஆயினும், தற்போது ஐடியூன்ஸ் வழியாக சந்தாதாரராக இருப்பவர்கள் இந்தச் செயல்முறையினால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த செயல் முறையானது நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் செலவினங்களை குறைக்க உதவுகிறது என அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. எனினும், நெட்பிலிக்ஸ் பெறுகின்ற இந்த சேமிப்பு, வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதக் கூடுதல் பயனையும் வழங்கவில்லை என்பதே உண்மை.
எடுத்துக்காட்டாக, நெட்பிலிக்ஸ் பிரீமியம் அலைவரிசையை, நேரடியாக அந்நிறுவனத்திற்கு 51 ரிங்கிட் சந்தாவைச் செலுத்திப் பெறலாம். ஆனால், இதற்கு முன்னர், ஐடியூன்ஸ் வழியாக 49.90 ரிங்கிட் சந்தாவில் இதே அலைவரிசை பெறப்பட்டது.