Home நாடு முகத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் முதன் முதலாக பினாங்கில் அமல்!

முகத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் முதன் முதலாக பினாங்கில் அமல்!

1072
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியில் குற்றவாளிகளின் முகங்களைக் கண்டறியும் கண்காணிப்பு கேமராவை (CCTV) முதன்முதலாக மலேசியாவில் பினாங்கு மாநிலம் செயல்படுத்தி உள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (Artificial Intelligence) பயன்படுத்தும் இந்த செயல் முறையை, ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

முதலில், 767 கண்காணிப்பு கேமராக்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பொறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோ கூறினார்.

#TamilSchoolmychoice

குற்றவாளிகளின் முகங்களை கண்டுபிடிப்பதற்காக இந்த தொழில்நுட்பம் பினாங்கு நகரக் குழு மற்றும் பினாங்கு காவல் துறை தலைமையகத்தின் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கப்படும்என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பினாங்கு காவல் துறைத் தலைவர் தெய்வீகன் பேசுகையில், முகங்களைக் கண்டறியும் தொழில் நுட்பமானது குற்றச் செயல்களைத் தடுப்பதோடு அல்லாமல் தீர்ப்பதிலும் காவல் துறைக்கு பெருமளவில் உதவும் என்றார்.