திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் பரவி வரும் சபரிமலை தொடர்பான இரண்டு தரப்புகளுக்கு இடையிலான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவடைந்துள்ள நிலையில், இன்று மாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
50 வயதுக்கும் குறைவான இரு பெண்கள் புதன்கிழமை அன்று சபரிமலைக் கோயிலில் நுழைந்ததற்காக கேரளா முழுவதும் வன்முறை எதிர்ப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
கேரளாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.
கடந்த புதன்கிழமை இரண்டு பெண்கள் கோயிலில் நுழைந்த பின்னர், கேரளாவில் எதிர்ப்பு போராட்டம் மேலும் அதிகரித்தது. அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஒருவர் நேற்று இரவு மருத்துவமனையில் காலமானார்.
எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து, பல்வேறு பகுதிகளில் கடைகள் மற்றும் சந்தைகளை மூடினர். திருவனந்தபுரத்திலிருந்து இவ்விவகாரத்தைப் பதிய வந்திருந்த பத்திரிகையாளர்கள் மீது பி.ஜே.பி தொண்டர்கள் என நம்பப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் இதுவரையிலும், குறைந்த பட்சம் 15 பேர் காயமடைந்துள்ளனர்.