Home கலை உலகம் இரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ படத்தை முந்துகிறது

இரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ படத்தை முந்துகிறது

1115
0
SHARE
Ad

சென்னை – தமிழ்த் திரையுலகம் என்றால் முதலிடம் எப்போதும் ரஜினிக்கும் அவரது படங்களுக்கும்தான். ஆனால் முதன் முறையாக சில அம்சங்களில் ரஜினிக்கும் ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற குரல்கள் கேட்கும் அளவில் போட்டியில் நேருக்கு நேர் ரஜினிக்கு எதிராகக் குதிக்கிறார், ‘தல’ அஜித்குமார்.

முதல் கட்டமாக பேட்ட பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பின்னரும் தயங்காது தனது விஸ்வாசம் படத்தையும் எதிர்வரும் ஜனவரி 10-ஆம் தேதி வெளியிட முன்வந்திருக்கிறார் அஜித்.

திரையுலகினர் அனைவரும் பரவலாக இரண்டு படங்களில் ஒன்று பின்வாங்கிவிடும் என எதிர்பார்த்திருக்க, இப்போது இரண்டு படங்களுமே கோதாவில் மோதுகின்றன.

#TamilSchoolmychoice

அதிலும் விஸ்வாசம் சில அம்சங்களில் பேட்ட படத்தை முந்தியிருக்கிறது. இரண்டு படங்களின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டதில் விஸ்வாசம் படத்தின் முன்னோட்டமே அதிகமான பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் என்ற கணக்கெடுப்பிலும் அதிகமான இரசிகர்கள் விஸ்வாசம் படத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

மூவி டாட்டா பேஸ் என்ற திரைப்படங்களுக்கான இணையத் தளம் நடத்திய ஆய்வில் மிக அதிகமான அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் என்ற ஆய்வில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை முந்தியிருக்கிறது.