Home நாடு பாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது

பாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது

1614
0
SHARE
Ad
திரெங்கானு மாநிலத்தில் உயர்ந்து எழும் கடல் அலைகள் (படம்: நன்றி – நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்)

கோலாலம்பூர் – இதுவரையில் அந்த நாட்டில் வந்தது – இந்த நாட்டில் வந்தது – மரங்கள் விழுந்தன – கூரைகள் பறந்தன – என புயல் தாக்கிய செய்திகளை ஊடகங்களின் வழி படித்தும் பார்த்தும் வந்த நாம், இப்போது மலேசியாவிலும் அதேபோன்ற –  பாபுக் (Pabuk) என்ற பெயர்கொண்ட ஒரு புயலை எதிர்கொள்ளவிருக்கிறோம்.

கடந்த புதன்கிழமை (ஜனவரி 2) முதல் மலேசியாவின் திரெங்கானு போன்ற கிழக்குக் கரை மாநிலங்களை பாபுக் என்ற கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.

இதற்காக மலேசிய அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகள் தயார் நிலையில் இருக்கின்றன.

#TamilSchoolmychoice

பெட்ரோனாஸ் நிறுவனம் தனது கடல்சார்ந்த எண்ணெய் வள சொத்துக்களைப் பாதுகாக்க அவசரகால நடவடிக்கைகளை முடுக்கி விட்டு, அதற்கான குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது.

பினாங்கு மாநிலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், அந்தத் துறையின் பணியாளர்கள் சுமார் 1000 பேர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிளந்தான் மாநிலத்தின் சஹாயா பூலான் (Pantai Cahaya Bulan) எனப்படும் கடற்கரையோரம் வசிப்பவர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

பாபுக் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சொத்துகள் சேதமடைந்தவர்களுக்கும் நிவாரண நிதி உதவிகள் வழங்கப்படும் என திரெங்கானு மாநில அரசாங்கமும் அறிவித்தது.

பாபுக் புயல் தாய்லாந்து நாட்டின் கடற்கரைகளையும் கடுமையாகத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.