Home நாடு முகமட் சாபுவின் மகன் போதைப் பொருள் பயன்பாட்டுக்காகக் கைது

முகமட் சாபுவின் மகன் போதைப் பொருள் பயன்பாட்டுக்காகக் கைது

1692
0
SHARE
Ad
முகமட் சாபு – அமானா கட்சியின் தேசியத் தலைவர்

கோலாலம்பூர் – தற்காப்பு அமைச்சரும் அமானா நெகாரா கட்சியின் தலைவருமான முகமட் சாபுவின் மகன் கோலாலம்பூரில் காவல் துறை நடத்திய அதிரடி பரிசோதனைகளில் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகனின் கைது குறித்து முகமட் சாபுவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

காவல்துறையின் பரிசோதனை நடவடிக்கைகளின்போது முகமட் சாபுவின் மகன் அகமட் சைபுல் இஸ்லாம் முகமட் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“எனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து நானும் எனது குடும்பத்தினரும் சட்டப்படியான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் மேற்கொள்ள அவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்” என முகமட் சாபு கூறியுள்ளார்.

இன்று சனிக்கிழமை அதிகாலையன்று அம்பாங் வட்டாரத்தில் தலைநகர் டாங் வாங்கி காவல் நிலையத்தைச் சேர்ந்த போதைப் பொருள் மற்றும் குண்டர் கும்பல்களுக்கு எதிராக டி-7 (D7) பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது அகமட் சைபுல் பரிசோதிக்கப்பட்டார் என அறியப்படுகிறது.
ஏறத்தாழ 101 நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் அகமட் சைபுல் மாரிஜூவானா என்ற போதைப் பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
முகமட் சாபுவின் மகனின் கைதை உறுதிப்படுத்திய காவல் துறையும், இந்த விவகாரம் போதைப் பொருள் குற்றப் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளது.